மட்டக்களப்பு கல்லடி ஆழிப்பேரலை நினைவுத் தூபியில் நினைவு கூரல்.!
மட்டக்களப்பு கல்லடி ஆழிப்பேரலை நினைவுத் தூபியில் நினைவு கூரல்.!
மட்டக்களப்பு கல்லடி ஆழிப்பேரலை நினைவுத் தூபியில் நினைவு கூரல்.! சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் மட்டக்களப்பில் இன்று காலை சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது .
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் கடற்கரையை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சுனாமி அனர்த்த நினைவுத்தூபி வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இவ்வணக்க நிகழ்வில் பல சுனாமி அனர்த்தத்தின்போது தமது உறவுகளை இழந்தவர்கள் மற்றும் சமூக ஆ;ர்வலர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட சமூக ஆர்வலர் பிரகாஷ் , மதத் தலைவர்கள், சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மற்றும் பொதுமக்களால் அகல் விளக்கேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆழிப்பேரவை அனர்த்தத்தில் தமது உறவுகளை இழந்த தாய், தந்தையர்கள், மற்றும் உறவினர்கள் கதறியழ உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.