பிரான்சில் விருந்து சாப்பிட்ட 700 விமான நிறுவன ஊழியர்கள் பாதிப்பு
பிரான்சில் விருந்து சாப்பிட்ட 700 விமான நிறுவன ஊழியர்கள் பாதிப்பு
பிரான்சில் கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்ட 700க்கும் அதிகமான விமான நிறுவன ஊழியர்கள், விருந்துக்குப் பின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
700க்கும் அதிகமான விமான நிறுவன ஊழியர்களுக்கு பதிப்பு
மேற்கு பிரான்சில், கடந்த வாரம், ஏர்பஸ் அட்லாண்டிக் நிறுவனம் சார்பில், விமான நிறுவன ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விருந்தில் கலந்துகொண்ட 700க்கும் அதிகமான விமான நிறுவன ஊழியர்கள், விருந்துக்குப் பின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விருந்து சாப்பிட்டபின், அவர்கள் அனைவருக்குமே வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படி விருந்து சாப்பிட்ட 700க்கும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
700க்கும் அதிகமான ஊழியர்கள் ஒரே நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில், ஏர்பஸ் விமான நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அத்துடன், எந்த உணவு இத்தனை பேர் உடல் நலம் பாதிக்கப்பட காரணமாக இருந்தது என்பதும் தெரியவரவில்லை.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.