கில்மிஷாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி நேரில் சந்திக்க ஆர்வம்
கில்மிஷாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி நேரில் சந்திக்க ஆர்வம்
கில்மிஷாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி நேரில் சந்திக்க ஆர்வம் ZEE தமிழ் தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய கில்மிஷாவிற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொலைபேசி ஊடாக ரணில் விக்ரமசிங்க, கில்மிஷாவுடன் உரையாடியுள்ளார்.
நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்தொலைபேசி ஊடாக இந்தியாவில் இருக்கும் சாதனைப் பாடகி கில்மிஷாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், நாட்டிற்கு வருகை தந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளனர்.
குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக, கில்மிஷா இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பலாலி விமான நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கில்மிஷாவின் பெற்றோர் அமைச்சருக்கு தமது பயணத்தின் நோக்கத்தினை தெரிவித்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கில்மிஷாவை வாழ்த்தி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.