சீனாவில் பாரிய பூகம்பம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி.!!
சீனாவில் பாரிய பூகம்பம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி.!!
சீனாவில் பூகம்பம் தாக்கிய பகுதிகளில் கடும் குளிரின்மத்தியில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வெப்பநிலை -13சி கடும் குளிர் காரணமாக பூகம்பத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கு குறுகிய கால அவகாசமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கு கன்சு மற்றும் கிங்காய் பிரதேசங்களை தாக்கிய பூகம்பத்தில் 100க்கும் அதிகமனாவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் காயமடைந்துள்ளனர். நள்ளிரவிற்கு சற்று முன்னர்நிகழ்ந்த இந்த பூகம்பம் காரணமாக மக்கள் வீதிகளிற்கு தப்பியோடினர்.
பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொது உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் கன்சுவில் 105 பேர் உயிரிழந்துள்ளனர் 397 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழுமையான தேடுதல் மீட்பு நடவடிக்கைகளிற்கு சீன தலைவர் உத்தரவிட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான படையினர் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் 3000க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை சீனாவில் 2010 யுசுசு பூகம்பத்தின் பின்னர் சீனாவை தாக்கிய மிக மோசமான பூகம்பம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்- 2010 இதே பகுதிகளே பாதிக்கப்பட்டன. அவ்வேளை 2700 கொல்லப்பட்டனர்.