தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்
தெற்கு அதிவேக வீதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் காயமடைந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு, சிறி சத்தாதிஸ்ஸ மாவத்தையில் வசிக்கும் வாங்குவத்த வடுகே தமித் நிஷாந்த பெர்னாண்டோ என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி கடும் மழையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 105 கிலோமீற்றர் அண்மித்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் கவலைக்கிடமான நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (18) கராப்பிட்டிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் நடத்தப்படவிருந்தது.