ஆலய நகைகள் மற்றும் பொற்காசுகள் திருடிய பூசாரி கைது!

ஆலய நகைகள் மற்றும் பொற்காசுகள் திருடிய பூசாரி கைது!

ஆலய நகைகள் மற்றும் பொற்காசுகள் திருடிய பூசாரி கைது! ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பவற்றை அவர் திருடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

ஆலய நகைகள்

கைது செய்யப்பட்ட பூசாரி போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button