வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு!! வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றிலே திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisements

காவல்துறையினர் விசாரணை

பாடசாலைகளுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலைக் கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள், மின்விசிறிகள் என்பவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.

IMG 20231212 WA0214 IMG 20231212 WA0210

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தால் பூவரசன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button