இத்தாலி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: நால்வர் பலி.!
இத்தாலி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: நால்வர் பலி.!
இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியிலுள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது நேற்று(8) இரவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனை பிரதான தளத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து தீயணைப்பு, மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நோயாளிகளை வெளியேற்றினர்.
ஆனாலும் இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததோடு மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.