கவர்ச்சியாக இருப்பதால் பல பிரச்சினைகள் – மாடல் அழகி வேதனை.!!
கவர்ச்சியாக இருப்பதால் பல பிரச்சினைகள்
கவர்ச்சியாக இருப்பதால் பல பிரச்சினைகள் – மாடல் அழகி வேதனை.!! அழகாக இருப்பதால் தனக்கு தோழிகள் யாரும் அமையவில்லை என்றும், தன்னை யாரும் திருமணத்திற்கு அழைப்பதில்லை எனவும் 55 வயதாகும் அழகி ஒருவர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல பத்திரிக்கையில் வெளியான அவரது பேட்டி தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இங்கிலாந்தின் பேசின்ஸ்டோக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஃபிரான் சாயர். இவருக்கு சிறு வயது முதற்கொண்டே ஒரு பிரச்னை இருந்து வந்துள்ளது. அவர் மிக அழகாக இருந்ததால் பெண்கள் யாரும் அவரிடம் பழக முன் வரவில்லையாம்.
இதேபோன்று நண்பர்களின் திருமணத்திற்கும் அவரை யாரும் அழைப்பது கிடையாது. பொதுவெளியில் கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பழக்கம் ஃபிரான் சாயருக்கு உள்ளது. இதனாலேயே யாரும் அவரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரபல பத்திரிக்கைக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் கவர்ச்சியாக இருப்பதால் பெண்கள் என் அழகை கண்டு பொறாமைப் படுகிறார்கள். ஒரு பெண் அழகாக இருப்பது மற்ற பெண்ணுக்கு பிடிக்காது. எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் ஒரு தோழி கூட கிடையாது. இதுபோன்ற பல பிரச்னைகள் எனக்கு ஏற்படுகின்றன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 21 பதிவுகள் மட்டுமே ஃபிரான் சாயர் பதிவிட்டுள்ளார். அவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு நண்பருக்காக ஏங்குகிறார். பெண்கள் விஷயத்தில் மட்டுமல்ல, ஆண்கள் மற்றும் காதல் விஷயத்திலும் அவர் அதிர்ஷ்டசாலி இல்லை என்று கூறுகிறார். அவரால் உண்மையான அன்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.