இரா.சாணக்கியனின் சிங்கள காதலி – வெளிவந்த பகீர் தகவல்கள்.!

சாணக்கியனின் சிங்கள காதலி - வெளிவந்த பகீர் தகவல்கள்..!! சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியனின் சிங்கள காதலி – வெளிவந்த பகீர் தகவல்கள்..!! சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் போலியாக புலிச் சாயம் போர்த்திக் கொள்வதாக ஆரம்பக் கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் மடியில் படுத்துறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சாமர சம்பத் திஸாநாயக்க ஒருமையில் தூற்றிய சம்பவமும் பேசுபொருளாகியுள்ளது.

இரா.சாணக்கியனே மகிந்த ராஜபக்ஸவின், சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியை பெற்று, மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டார் என குறிப்பிட்டார்.

இரா.சாணக்கியனின்

இதன்போது நாடாளுமன்றத்தில் இருந்து இரா.சாணக்கியன் வெளியேறிய போது, போக வேண்டாம். ஆண் என்றால் இருந்து கேட்டுவிட்டு போ. நீ ஆண் தானே. இருந்து கேள் என சாமர சம்பத் திஸாநாயக்க கூறியுள்ளார்.

சிங்கள பெண்ணுடன் காதல்

தொடர்ந்து உரையாற்றிய சாமர சம்பத் திஸாநாயக்க, தற்போது சென்றவரே மகிந்த ராஜபக்ஸவின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக இருந்தார். 2010 ஆம் ஆண்டு டார்லி வீதியில் எமது கட்சி உறுப்புரிமையை பெற்று, உறுப்புரிமை அட்டை வழங்கப்பட்டது.

இரா.சாணக்கியன் சென்றது கண்டி சில்வெஸ்ரர் கல்லூரிக்கு எனவும், சிங்கள மக்களின் வீடுகளிலேயே உணவு உண்டார் என குறிப்பிட்டுள்ளார்.

காதல் வயப்பட்டதும் சிங்கள பெண்ணிடம், திருமணம் செய்யவிருப்பதும் சிங்களப் பெண் எனவும் குறிப்பிட்ட சாமர சம்பத் திஸாநாயக்க, அவர் தானே புலி புலி என கூறிக்கொள்கின்றார் எனவும் விமர்சித்துள்ளார்.

இரா.சாணக்கியனின்

கண்டி மாவட்டத்தில் வளர்ந்த அவர் இருப்பது கண்டியில், கல்வி கற்றது சிங்களப் பாடசாலையில், தற்போது புலி புலி என கூறிக்கொள்கின்றார். இவர் மனிதரா? எனவும் இராங்க அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 10 பேர் இங்கு இருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய 9 பேருக்கும் புலி என கூறினால், அதனை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றார். அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள் எனவும் சாமர சம்பத் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மட்டக்களப்பில் இருந்து வந்து கண்டியில் இருந்து விட்டு, சிங்கள மக்கள் வீடுகளில் உண்டு, சிங்கள மக்களின் வீடுகளில் உறங்கிவிட்டு, புலி புலி என கூறிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை இரா.சாணக்கியன் தற்போது மாற்றி வருகின்றார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவின் மடியில் சாணக்கியன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஐவரும் தற்போது ரணில் விக்ரமசிங்கவுடனேயே இருக்கின்றனர். இவர்கள் பக்கம் ஐவர் மாத்திரமே உள்ளனர். இவர்கள், வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வருகின்றனர்.

அடுத்த முறை வடக்கில் எதுவுமே இவர்களுக்கு கிடைக்காது எனவும் இராங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேல் நாம் எதனையும் கதைக்கப் போவதில்லை. எனினும் எம்மை தூண்டினால் எமக்கும் கூறுவதற்கு விடயங்கள் உள்ளன. இவ்வளவு காலமும் அவருக்கு நாம் இடம் விட்டுக் கொடுத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்திற்கு சென்றால் அவர் கூறுவதை தான் இந்த நாட்டு மக்கள் கேட்கின்றனர் என இரா.சாணக்கியன் நினைத்துக்கொண்டிருகின்றார். அது இந்த நாட்டில் இடம்பெறாது. அவ்வாறு எண்ண வேண்டாம் என அவரிடம் கூறுங்கள் எனவும் சாமர சம்பத் திஸாநாயக்க கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவின் மடியில் இருந்துவிட்டு, மகிந்தவிடம் உணவு உண்டுவிட்டு, டாலி வீதிக்கு சென்று மைத்திரிபால சிறிசேனவிடம் உறுப்புரிமையை பெற்றுவிட்டு, இன்று மகிந்த ராஜபக்ஸ தொடர்பாக இரா.சாணக்கியன் கதைக்கின்றார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூய்மையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button