குடிநீர் கிடைக்கும் இடத்தில் மர்ம ஒலி; திடீரென வற்றிய நீர்நிலை

கொத்மலையில் – ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில் கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் அன்றாடம் உபயோகித்து வந்த நீர் நிலைகள் திடீரென வறண்டு போனது ஆச்சரியமாக உள்ளதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் 4 நாட்கள் உறங்காமல் ஒரே இடத்தில் இரவு பகலாக கலந்துரையாடி தீர்வு காணவுள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர் கிடைக்கும் இடத்தில் மர்ம ஒலி; திடீரென வற்றிய நீர்நிலை

நுவரெலியா மாவட்ட செயலாளர்

இது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்தார்.

“மழைக்காலத்தில் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளே இருந்து மிக பயங்கரமான சத்தம் கேட்டு அவதிப்படும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப் பகுதி கட்டிட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகும்.

அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் நோக்கம். ஆனால் எந்தவொரு ஆபத்தான அல்லது பேரழிவு சூழ்நிலைக்கான ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

எனினும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் விரைவில் சிறப்பு விசாரணை நடத்தும்” என அவர் குறிப்பி்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button