நிபா வைரஸ்
கேரளா, கோழிக்கோட்டை சேர்ந்த இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு காய்ச்சல் குறையாத நிலையில் உயிரிழந்தனர்.
உடனே, அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இருவரையும் தாக்கியது நிபா வைரஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 பேர் பலி
இதனால் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவி வருகிறது. எனவே, அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லைகளான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் விரைவில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் படி, நிபா வைரஸ் பழம் உண்ணும் வெளவால்களால் ஏற்படுகிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. சுவாச நோய்களுடன், இது காய்ச்சல், தசை வலி, தலைவலி, காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.