SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

யாழில் பகீர் சம்பவம்: தாய் மற்றும் மகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!

யாழில் பகீர் சம்பவம்: தாய் மற்றும் மகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு (09-09-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisements

யாழில் பகீர் சம்பவம்: தாய் மற்றும் மகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்

மேலும் குறித்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த 24 வயதான கணேசரத்தினம் வேனுஜா மற்றும் அவரது தயாரான 65 வயதான கணேசரத்தினம் யோகேஸ்வரி ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழில் பகீர் சம்பவம்: தாய் மற்றும் மகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisements

Related posts

12 வயது மாணவியை காட்டுக்குள் அழைத்து சென்ற நபர் கைது.!

admin

இலங்கை தொடர்பிலான காணொளிகளை சற்று முன்னர் நீக்கிய சேனல் 4!

admin

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை!

admin