பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

மாரிமுத்து

தற்போதைய சூழலில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து தான். சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடரில் “இந்த மா ஏய்” என்ற ஒற்றை வசனத்தின் மூலம், மிக பெரிய பிரபலமடைந்த அவர், 90-கள் முதலே திரைதுறையில் இயங்கி வந்துள்ளார்.

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவ்வப்போது சினிமாவில் மக்களுக்கு பரிட்சயமாகும் கதாபாத்திரங்களில் நடித்தாலும், மாரிமுத்து என்றால் அது எதிர்நீச்சல் தொடர் தான். அந்தளவிற்கு இந்த தொடர் அவருக்கு பெரும் புகழை கொடுத்தது. அண்மையில் அவர் ரஜினி நடிப்பில் வெளியான “ஜெயிலர்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

மாரடைப்பால் மரணம்

இந்நிலையில், தான் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட அவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ள மாரிமுத்து, பரியேறும் பெருமாள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மரணமடைந்த அவருக்கு வயது 57 ஆகும். மாரிமுத்துவின் திடீர் மறைவு அதிர்ச்சியை மட்டுமின்றி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button