SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

ஜேர்மனியில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் பிரித்தானியரா… விசாரணை துவக்கம்

ஜேர்மனியில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் பிரித்தானியரா... விசாரணை துவக்கம்

ஜேர்மன் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடல் மாயமான சிறுவன் பென் நீதாமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கல்லைக் கட்டி நதியில்

சிறுவன் பென் நீதாமின் தாயார் கெர்ரி இந்த விவகாரம் தொடர்பில் தெற்கு யார்க்ஷயர் பொலிசாரை நாடியுள்ளதுடன், மே 2022ல் பவேரியாவில் உள்ள டான்யூப் நதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை அடையாளம் காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisements

ஜேர்மனியில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் பிரித்தானியரா... விசாரணை துவக்கம்

குறித்த சிறுவனின் சடலம் உலோகத்தாளால் சுற்றப்பட்டு கல்லைக் கட்டி நதியில் வீசியிருந்தனர். தற்போது அந்த சிறுவன் மாயமான பென் நீதாமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறி பிரித்தானிய பொலிசார் விசாரணை துவங்கியுள்ளனர்.

சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள், 5ல் இருந்து 6 வயதிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். சிறுவன் பென் நீதாம் விவகாரமானது ஜூலை 1991ல் நடந்துள்ளது.

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: பொதுமக்களின் உதவியை நாடும் சர்வதேச பொலிசார்கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: பொதுமக்களின் உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

இன்டர்போல் வெளியிட்ட தகவல்

கிரேக்க தீவான Kos-ல் உறவினர்களின் பண்ணை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜூலை 24ம் திகதி திடீரென்று மாயமாகியுள்ளான். சம்பவத்தின் போது பிறந்து 21 மாதங்கள் மாட்டுமே எனவும் கூறப்படுகிறது.

ஜேர்மனியில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் பிரித்தானியரா... விசாரணை துவக்கம்

இந்த நிலையில், ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலம் தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட தகவலுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து 33 குறிப்புகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், டி.என்.ஏ சோதனை முன்னெடுத்த நபர் தெரிவிக்கையில், டான்யூப் நதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் பெரும்பாலும் ஜேர்மானியராக இருக்க வாய்ப்பில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Related posts

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

Harini

யாழில் பெண் போதைப் பொருள் வியாபாரி மற்றும் பாடசாலை மாணவன் உட்பட 11போ் கைது!

Chaya

டேட்டிங் செயலியில் சந்தித்த இளம் பெண்ணால் 17 லட்சம் டொலரை பறிகொடுத்த 55 வயது முதியவர்!

Harini