லண்டனில் பரிதாபமாக பலியான ஈழத் தமிழ் இளைஞன்!

பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் நடந்துள்ளது.

Advertisements

மேலும் குறித்த சமபவத்தில் விமானியான 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரெ இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

23 64f8b39ff19a1
லண்டனில் பலியான பரிதாபமாக பலியான ஈழத் தமிழ் இளைஞன்!

இவர், குறித்த அருவியில் இரண்டு குழந்தைகளை உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

பின்னர் குழந்தைகள் தண்ணீரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட போதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார், ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அவரது சடலம் நீருக்கடியில் கேமரா மூலம் கண்டெடுக்கப்பட்டு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

மோகனநீதனின் மறைவுக்கு அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

அவர் பலரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தார், மோகனநீதன் தனது புன்னகையால் தன்னை அறிந்த அனைவருக்கும் அரவணைப்பையும் அன்பையும் கொண்டு சேர்த்திருக்கிறார்” என புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையில் மோகனநீதன் இறுதிச்சடங்குகளுக்காக GoFundMe பக்கம் மூலம் நிதி திரட்டப்படுகிறது.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button