SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக்கொலை

தகாத உறவில்

பட்டதாரி யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்தார் என கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisements

உறவை நிறுத்தியதால் தொந்தரவு

இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்த யுவதியுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளார்.

தகாத உறவில்

இந்நிலையில், யுவதி அவருடனான உறவை நிறுத்தியதால், காதலன் தொலைபேசியில் திட்டி மிரட்டியுள்ளார்.

இச்சம்பவத்துக்கு முன்னைய நாளும் (3) யுவதியை மிரட்டியதால் அவரின் பெற்றோரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (4) அந்த யுவதியின் வீட்டுக்கு வந்த நபர், யுவதியை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்பட்டபோதே தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Advertisements

Related posts

மொரோக்கோ நிலநடுக்கத்திற்கு முன் வானில் தோன்றிய மர்மமான ஒளி!

Harini

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை 65 பெண்களுக்கு வழங்கிய விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!

Harini

இன்றைய தினம் நிகழும் அரிய வகை சூரிய கிரகணம்.!

Harini