வீட்டுக்குள் திருட வந்த கொள்ளையானை பிடித்த கணவன் – மனைவி!
வீட்டுக்குள் திருட வந்த கொள்ளையானை பிடித்த கணவன் – மனைவி! ஹோமாகம பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட வந்த சந்தேகநபரை கணவன்-மனைவி இணைந்து பிடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. கூர்மையான ஆயுதத்துடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன், முதலில் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்துகிறான்.
பின்னர், வீட்டு உரிமையாளரின் மனைவியின் அருகில் சென்ற கொள்ளையன், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளான்.
அப்போது, குறித்த பெண் கொள்ளையனை தள்ளி கீழே விழ வைத்துள்ளார்.
இதன்போது, கொள்ளையனிடம் இருந்த கூரிய ஆயுதத்தை வீட்டின் உரிமையாளர் பறித்து அதே ஆயுதத்தால் கொள்ளையனை தாக்கியதில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான கொள்ளையன் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.