SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

கடமைக்கு சென்ற காவல்துறையினர் மீது கத்திக் குத்து – ஒருவர் கைது!

கடமைக்கு சென்ற காவல்துறையினர் மீது கத்திக் குத்து – ஒருவர் கைது!  எல்ல, கொடுவெல பகுதியில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (30) அதிகாலை 01.30 மணியளவில் எல்ல காவல் நிலையத்தின் ஐந்து உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புக்காகச் சென்ற போது அவர்களில் இருவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

Advertisements

காயமடைந்தவர்கள் 38 மற்றும் 29 வயதுடைய இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் எனவும், அவர்கள் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Related posts

இளம் பெண் படுகொலை: பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம்!

Chaya

இந்தியாவை உளவு பார்க்க இலங்கையில் ரேடார்

Chaya

பிரான்சில் 16 வயது மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியர்

admin