பெண் ஒருவரின் மூளையில் இருந்து உயிருடன் கண்டெடுக்கப்பட்ட புழு!
அவுஸ்திரேலியாவில் 64 வயது பெண் ஒருவரின் மூளையில் இருந்து உயிருள்ள புழு ஒன்றை மருத்துவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த தகவலை, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தையும், கேன்பரா மருத்துவமனையையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
Advertisements
மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 8 சென்டிமீட்டர் புழு மூளையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், அந்தப் புழு இன்னும் உயிருடன் நெளிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த புழு அறிவியல் மொழியில் ஆஃபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்ததாகும்.
இவ்வகை புழுக்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements