ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு அருகே, வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ஒரு ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.
தகவல் தெரிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மலைப்பாம்பு கூரைகளின் வழியாகவே சென்று உயர்ந்த மரங்களுக்கிடையே காட்டுக்குள் புகுந்து செல்வதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அந்த மலைப்பாம்பு மக்களை நோக்கி தனது தலையை மெதுவாக திரும்பி தனது வால் பகுதியை உயரே தூக்கியவாறே மக்களை சில வினாடிகள் உற்று பார்த்தது.
அப்போது சில குழந்தைகள் பயத்தில் அலறின. பிறகு அங்கிருந்து உயரமான மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் கீழே விழுந்து விடாமல் மெதுவாக நகர்ந்தவாறே காணாமல் போனது.
இந்த முழு சம்பவத்தையும் ஒருவர் தனது கமராவில் வீடியோவாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிட்டார்.
தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.