களுவாஞ்சிகுடி உயர் போலீஸ் அதிகாரியின் கப்சா அம்பலம்..!! (Video Updated)
இலஞ்சப்பணத்தில் ஏப்பம் விடும் களுவாஞ்சிகுடி உயர் போலீஸ் அதிகாரியின் கப்சா அம்பலம்..!!
கடந்த ஞாயிற்றுக்கிழம (27/8/23) அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பிரதேசத்தில் ஒரு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து வீதிக்கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீதி போக்குவரத்து போலீசார் (Traffic Police) மீது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டு.
அதன் பின்னணியில் களுவாஞ்சுகுடி தலமை போலீஸ் அதிகாரி செயற்பட்டமையும் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லாறு போலீஸ் சோதனை சாவடிக்கு (Police Check Post) அருகில் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த Traffic போலீஸ் அதிகாரியான தேவராசன் என்பவர் மீதே விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
ஞாயிற்றுக்கிழம மாலை 4.50 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேவராசன் ஒரு கார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேரூந்துடன் விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதி வேகமாக பயணித்ததை அவதானித்துள்ளார்.
எனவே குறித்த காரை மறித்து, நிறுத்தும்படி கேட்டுள்ளார். எனினும் காரில் பயணித்த நபர் எனக்கு OIC யுடன் பழக்கம் இருக்கிறது, நிறுத்த முடியாது எனவும் நடுவீதியில் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நடுவீதியில் வாகனத்தை நிறுத்தி பேசுவது தவறு, ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக இருக்கிறது. தயவு செய்து உங்கள் காரை ஓரமாக நிற்பாட்டுங்கள் எனவும் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் அவரிடம் கேட்டுள்ளார் தேவராசன்.
ஆனால் தன்னிடம் தற்போது வாகன ஓட்டுனர் உரிமம் கைவசம் இல்லை எனவும் வீட்டில் இருப்பதாகவும் கூறி ட்ராப்பிக் போலீசாரான தேவாராசாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த கார் ஓட்டுனர்.
நிலமை மோசமாக செல்லவே, மறுபக்கமாக சென்று வாகனத்தில் சாவியை பிடுங்கும் நோக்கில் காரின் முன்பக்கமான சென்ற தேவராசனை குறித்த நபர் தனது காரால் வேண்டுமென்றே இடித்து 10 மீற்றர் வரை தள்ளியுள்ளார்.
சற்று சுதாகரித்துக்கொண்ட தேவராசா வாகனத்தின் மீது அடிகாயத்துடன் பாய்ந்து தப்பித்துள்ளார். இதனை அவதானித்து அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஏனைய போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நிலமையை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் குறித்த வாகன ஓட்டுனர் களுவாஞ்சிகுடி தலமை போலீஸ் அதிகாரியான அபே விக்ரம என்பரை தொடர்பு கொண்டு தேவராசாவிடம் பேசும்படி கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொலைபேசியில் உரையாடிய அபேவிக்ரம நிலமையை சரி செய்து பேசி அனுப்பி விடுமாறும் தேவராசாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னை வேண்டும் என்றே காரால் இடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவரிடம் ஓட்டுனர் உரிமம் இருக்கவில்லை எனக்கூறியதுடன் நான் காயப்பட்டுள்ளேன் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதனை மறுத்த அபே விக்ரம கார் ஓட்டுனரை உடனடியாக களுவாஞ்சுகுடி மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னர் தேவராசாவும் தனது முழங்காலில் பலத்த அடி விழுந்தமையினால் களுவாஞ்சுகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை சந்தித்தவர் மருத்துவனைக்கு செல்வது என்பது சாதாரண விடயம் ஆனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் மருத்துவமனையில் போலியான முறையில் அட்மிட் ஆகியது ஆச்சரியமே.
ஓட்டுனர் உரிமமும் இல்லாமல் வாகனம் செலுத்தி வந்த அந்த நபரை அபே விக்கரம காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பது தொடர்பாக விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.
குறித்த கார் ஓட்டுனர் காத்தான்குடி பிரபல வங்கியில் வேலை செய்யும் ஒரு பணபலம் மிக்கவர் என்பதும் களுவாஞ்சுகுடியில் வசிக்கும் இவர் களுவாஞ்சுகுடியில் தனது சொந்த தேவைக்காக பல தடவைகள் அபே விக்ரம என்பருக்கு லஞ்சம் கொடுத்து தன் வீட்டுப்பிள்ளை போல பாதுகாத்து வருவது தெரியவந்துள்ளது.
என்னதான் இலங்கை அரசு லஞ்சம் ஊழல் ஒழிப்பு என பேசினால் இன்னும் அவ்வாறான நிலமைகள் இருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகவே இருக்கிறது. முக்கியமாக மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் துறையில் லஞ்சம் ஊழல் என்பது மக்களை மக்குகளாக்கும் ஒரு செயல்பாடே.
களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் சேர்ந்த அந்த குற்றவாளியை நீதிமன்றம் ஊடாக சட்ட நடிவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்தபோது குற்றவாளியை அவசர அவசரமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றவும் குறித்த ஓ.ஐ.சி உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டம்- நீதி- என்பன வெறும் பணம் இருப்பவர்களுக்கும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தான் செயற்படும் என்றால் சாதாரண மக்கள் எங்கு போவது யாரிடம் போவது என்ற கேள்வி இவ்வாறான சில அதிகாரிகளின் கேவலமான சம்பவங்களால் கேள்விக்குறியாகின்றது.
களுவாஞ்சிகுடி பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களே இது உங்களின் கவனத்திற்கு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. குற்றம் செய்தவர் எந்த மேலதிகாரியாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாகவே நடக்கிறது.
மக்களுக்கு பிரச்சினை என்றால் போலீசாரிடம் செல்லுவார்கள். ஆனால் ஒரு போலீசாருக்கே தலமை போலீஸ் அதிகாரியால் பிரச்சினை என்றால் எங்கே செல்வது. அதுவும் லஞ்சம் என்பதை அடியோடு வெறுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு நியாயம் கிடைக்குமா என்பதே பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறலாக இருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ட்ராபிக் பொலீஸ் அதிகாரியை வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி காயப்படுத்தியது மட்டுமல்லாமல் மேலதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தவறில் இருந்து ஓடி ஒளியும் அந்த நபர் தண்டிக்கப்படுவாரா.? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
குற்றம் செய்தவர் ஒரு புறம் இருக்க குற்றம் செய்தவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவரும் ஒருவகையில் குற்றவாளியே. அப்படியாயின் குற்றவாளியை தப்பிக்க வைக்க உதவிய அதிகாரியை என்ன செய்யலாம் என்பதை அவருக்கு மேல் பணிபுரியம் மேல் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசு தரும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இவ்வாறான பண முதலைகள் போடும் பிச்சைக்காசுக்கு வாலாட்டி பிழைக்கும் அபேவிக்ரம போன்ற அதிகாரிகள் காசுக்காக உடலை விற்கும் வேசிகளுக்கு சமம் என்பதே உண்மை.
செய்தி:- கிழக்கான்