SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!!

அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!!  யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மனைவியை வாளைக் காட்டி கணவன் கடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (29-08-2023) காலை இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisements

குறித்த கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து பருத்தித்துறை பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அவர்களது தாயார் வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

இன்று திடீரென கணவர் அவரது சகாக்கள் சகிதம் வாள் கொண்டு சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மனைவியை அவரது விருப்பமின்றி கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Related posts

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

Harini

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவர்

Harini

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் நோய்ப்பரவல்!

Harini