SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

யாழில் இளம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் அத்துமீறிய அதிகாரி

யாழில் இளம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் அத்துமீறிய அதிகாரி யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisements

அதிகாரிக்கு இடமாற்றம்

பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

அவர் சனிக்கிழமை (26) துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அது தொடர்பில் குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரான அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisements

Related posts

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி

Harini

மண்வெட்டியால் மருமகனை தாக்கி கொலை செய்த மாமனார்!

Chaya

டுவிட்டரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்

Chaya