ஜேர்மனியில் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்குக் கிடைத்த புதையல்
ஜேர்மனியில், பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவனுக்கு பழங்கால நாணயம் ஒன்று கிடைத்தது. முதலில் அவனுக்கு அதன் அருமை தெரியவில்லை!
மண்ணில் கிடைத்த 1,800 வருட பழமையான நாணயம்
ஜேர்மன் நகரமான Bremenஇல், பள்ளியில் மணலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான் Bjarne என்னும் 8 வயதுச் சிறுவன்.
அப்போது அவனுக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. அதை வீட்டில் கொண்டு வைத்திருக்கிறான் Bjarne. அதன் பெருமை அவனுக்குத் தெரியவில்லை.
பின்னர் அந்த நாணயம் தொல்பொருள் ஆய்வாளர்களிடன் கொண்டுவரப்பட்டபோதுதான், அது 1,800 வருட பழமை வாய்ந்த ரோமர் கால நாணயம் என்பது தெரியவந்துள்ளது.
எப்படி அந்த நாணயம் Bremen நகரை வந்தடைந்தது என்பது தெரியவில்லை. இதுவரை அந்நகரில் அதுபோன்ற இரண்டு நாணயங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த நாணயம், அருங்காட்சியகம் ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.