இலங்கையில் கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை எடுக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா 3ஆம் சிங்கப் படையணியில் கடமையாற்றி வந்த அனுராதபுரத்தில் வசிக்கும் 36 வயதுடைய இராணுவ கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Advertisements
குறித்த இராணுவ கோப்ரல் காப்புக்காட்டுக்குள்ளேயே திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காப்புக்காட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்களுக்குப் பின் வந்த இருவர், ராணுவ அதிகாரி ஒருவர் காப்புக்காட்டில் கிடப்பதாகக் கூறியதையடுத்து, மற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கார்போரலை மருத்துவமனையில் சேர்த்தனர்.
Advertisements