இலங்கை ரசிகையை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய நடிகர் ஆர்ணவ்; திவ்யா கூறிய அதிர்ச்சித் தகவல்
சின்னத்திரை நடிகர் அர்ணவ் இலங்கைப்பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக , ஆர்ணவ் இன் முன்னாள் மனைவி திவ்யா அதிர்ச்சித்தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து பின் பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தார்கள். ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பிரிந்தமை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரசிகையாக பேச வந்த பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அர்ணவ்
அண்மையில் திவ்யாவிற்கு குழந்தையும் பிறந்த நிலையில் , திவ்யா அர்ணவ் குறித்து ஒரு பேட்டியில் பகீர் தகவல் கூறியுள்ளார். அதில் அவர், அர்ணவுடன் பிரச்சனை போய்க் கொண்டிருந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் மெசேஜ் செய்தார்.
பிரசன்னா என்கிற என்னுடைய தோழியையும் அர்ணவ் இப்படித்தான் ஏமாத்திட்டார் என அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்ததும் நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.
ரசிகையாக பேச வந்த இலங்கை பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி பின் கை விட்டுள்ளார், இதற்கு அர்ணவின் நண்பரே ஆதாரம் என திவ்யா அதில் கூறியுள்ளார்.