SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

கல்லறை போல் காணப்படும் ‘டைட்டானிக்’ கப்பல்; வெளியான புகைப்படம்!

கல்லறை போல் காணப்படும் 'டைட்டானிக்' கப்பல்; வெளியான புகைப்படம்!

1912 ஆம் ஆண்டு பனிப்பாறை மீது மோதி அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின், புதிய டிஜிட்டல் ஸ்கேன்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் தண்ணீருக்கடியில் 12 ஆயிரத்து 500 அடியில் இருக்கும் கப்பலின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேன், ஆழ்கடல் வரைபடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisements

ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களை குழு எடுத்ததன் மூலம் கப்பலின் துல்லியமான 3டி வடிவத்தை உருவாக்க முடிந்தது.

கல்லறை போல் ,காணப்படும், 'டைட்டானிக்' கப்பல்,வெளியான புகைப்படம்

இதன்போது ‘Deep-sea mapping’ நிறுவனமான மாகெல்லன், லண்டனைச் சேர்ந்த அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்து டன் இணைந்து இந்த ஸ்கேனிங் பணியைத் தொடங்கியது.

1985 ல் டைட்டானிக் கப்பலின் சிதைவு கண்டுபிடிக்கப்பட் டதிலிருந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டாலும், இந்த அளவு துல்லியமான டிஜிட்டல் ஸ்கேன் செய்வது இதுவே முதல் முறையாகும்.

Advertisements

Related posts

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவு பகுதியில் கப்பல்கள் பயணிப்பது ஆபத்தானது!

Harini

மதுவால் வந்த வினை – இலங்கை வந்த ரஷ்ய பிரஜைக்கு ஏற்பட்ட நிலை!

Chaya

தமிழ் – சிங்கள தரப்புக்கிடையில் பாரிய மோதல்! அறுவர் படுகாயம் : திருகோணமலையில் பதற்றம்

Chaya