SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை 65 பெண்களுக்கு வழங்கிய விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!

பயன்படுத்தப்பட்ட ,ஆணுறைகளை, 65 பெண்களுக்கு வழங்கிய விவகாரம் ,விசாரணைகள், ஆரம்பம்

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள 65 பெண்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்பேர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள முகவரிகளுக்கு இந்த ஆணுறைகள் அனுப்பப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட ,ஆணுறைகளை, 65 பெண்களுக்கு வழங்கிய விவகாரம் ,விசாரணைகள், ஆரம்பம்

Advertisements

இப்பெண்கள் அனைவரும், மெல்பேர்னின் கில்ப்ரேடா கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் என நம்பப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட ஆணுறை அனுப்பப்பட்டமை குறித்து முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் பெண்ணொருவர் தெரிவித்திருந்தார். இறுதியாக கடந்த திங்கட்கிழமை ஒருவர் இது குறித்து அறிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்களுக்கு வந்த தபால் பொதியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறையுடன் கையால் எழுதப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

பாடசாலையின் பழைய வருடாந்த புத்தகம் ஒன்றிலிருந்து முகவரிகள் பெறப்பட்டிருக்கலாம் என இப்பெண்கள் சந்தேகிக்கின்றனர் என ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரிணை நடத்தி வரும் பொலிஸார்இ இது குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் அத்தகவல்களை வெளிப்படுத்த முன்வருமாறு கோரியுள்ளனர்.

Advertisements

Related posts

உக்ரைன் வீரரின் தலையை துண்டிக்கும் ரஷ்யா; பகீர் கிளப்பிய தகவல்!

Harini

கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

admin

கனடாவில் கோர தீ விபத்து;பல மில்லியன் டொலர் சேதம்

Harini