SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

தகாத உறவு மனைவியுடன் இணைந்து கணவனைப் படுகொலை ; வாக்கு மூலம் வழங்கிய இரு பிள்ளைகளின் தந்தை

தகாத உறவு மனைவியுடன் ,இணைந்து கணவனைப் ,படுகொலை , வாக்கு மூலம், வழங்கிய இரு பிள்ளைகளின், தந்தை

தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று (17) மொரவக்க நீதவான் துமிந்த பஸ்நாயக்கவிடம் முன்னிலை படுத்தப்பட்டுள்ளார்.

”அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நீதவான் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisements

ஊறுபொக்க தொலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான ஜினதாஸ என்பவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 33 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் அவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே குறித்த சந்தேக நபரால் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

தகாத உறவு மனைவியுடன் ,இணைந்து கணவனைப் ,படுகொலை , வாக்கு மூலம், வழங்கிய இரு பிள்ளைகளின், தந்தை

இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தையும் 83 வயதான பெண்ணும் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இது தொடர்பில் நீதவான் சந்தேக நபரிடம் வினவிய போது “ அவரால் தான் இந்தக் கொலையை செய்தேன்.

அவர் எனக்குக் குடிக்க கொடுத்து அவரைக் கொல்லச் சொன்னார். பின்பு புதைக்க வேண்டிய இடத்தையும் அவரே காட்டினார்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மொறவக்க பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் மே மாதம் 11 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

Advertisements

Related posts

யாழில் இளம் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் அத்துமீறிய அதிகாரி

admin

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன! பொலிசில் முறைப்பாடு!

Chaya

இன்று முடங்கும் வடக்கு – கிழக்கு! வீதிகளில் படையினர் குவிப்பு

Harini