பாகுபலி – கே.ஜி.எஃப்
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அதே போல் பிரம்மாண்ட படைப்பை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் ஏங்கி போயிருந்தனர்.
அதை சரிசெய்யும் விதமாக கன்னடத்தில் இருந்து கே.ஜி.எஃப் திரைப்படம் வெளிவந்தது. இந்த இரு திரைப்படங்கள் வெளிவந்த பின் இந்த படங்களுக்கு இணையாக தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படமும் வெளிவரவில்லையே என்பது போல் பேச துவங்கினர்.
இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களையும் தவிடுபொடியாக்கும் விதமாக தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு படம் வெளிவரவுள்ளதாம்.
இனி இந்த படம் தான்
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் தான் அது என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை எடுத்த இந்தியன் 2 படத்தை கமல் ஹாசனுக்கு சமீபத்தில் போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். படத்தை பார்த்த கமல் ஹாசன் பிரமித்து விட்டாராம். படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என்பது போல் பாராட்டியுள்ளாராம்.
இதனால் கண்டிப்பாக பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் படங்களின் பேச்சு கோலிவுட் திரையுலகில் செல்லாது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.