லண்டன் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார்!

பிரித்தானிய பிரதமரது மாமியார் தான் என்பதனை யாருமே நம்புகிறார்கள் இல்லை என எழுத்தாளரும் தொழிலதிபருமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுதா மூர்த்தி வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி ஒரு முறை லண்டனுக்கு சென்ற போது விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பிரிவில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டதாக சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

லண்டன் அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி கொடுத்த, பிரதமர், ரிஷி சுனக்கின் ,மாமியார்

“குடிவரவு அதிகாரி எனது விலாசத்தை கூறுமாறு கூறிய போது, நான் டவுணிங் வீதி முகவரியையே எழுதினேன். அந்த அதிகாரி வியப்புடன் பார்த்தார்.” என அவர் குறிப்பிட்டபர்.

இந்தியாவின் பிரபல இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவுநரும் தொழிலதிபருமாகிய என். கே நாராயண் மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவார் என்று விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நம்ப மறுத்ததாகக் கூறியுள்ளார்.

தனது மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்த சுனக்கின் மாமியார் தான் என்பதை பெரும்பாலான மக்களால் நம்ப முடியவில்லை என்று கூறினார்.

லண்டன் அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி கொடுத்த, பிரதமர், ரிஷி சுனக்கின் ,மாமியார்

விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு தனது எளிமையான தோற்றமே காரணம் என அவர் கூறியுள்ளார்.

குடிவரவு அதிகாரி தன்னைப் பார்த்து “நீங்கள் கேலி செய்கிறீர்களா?” என்றார். “இல்லை, நான் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 72 வயது எளிய பெண்ணான நான் பிரதமரின் மாமியாராக முடியும் என்று யாரும் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/ETPME4Eo0Ds

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button