வனிதா தனது மகனான ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள நிலையில், ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீஹரி சரியான பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் வனிதா
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.
நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.
ஹீரோவை மிஞ்சிய மகன்
தற்போது தனது வேலையில் பிஸியாக இருந்து வரும் வனிதா, கடந்த ஆண்டு தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றினை வெளியிட்டார்.
வனிதாவின் பதிவினை பார்த்து நீங்கள் வனிதா மகன் தான், அம்மா மாதிரியே இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்ததற்கு தான் வனிதாவின் மகன் அல்ல… ஆகாஷின் மகன் என்று ஸ்ரீஹரி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீஹரி தனது புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.