விந்துவினால் தயாரிக்கப்பட்ட உணவு: விரும்பி உண்ணும் மக்கள்! எங்கு தெரியுமா
ஸ்பெயின் நாட்டிலுள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்பட்டு வருகின்றது. அதை கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டை சேர்ந்த டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞரே இந்த புதிய விதமான உணவை செய்துள்ளார்.
மேலும், பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் பிஷ் ஆகிய மீன்களில் சிறு பைகளின் மூலம் விந்து எடுக்கப்படுகின்றது.
அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதுடன், அந்த திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கின்றனர்.
டேவிட் முனோஸ் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த வேளை அங்கு சமையல் கலைஞரான ஹிரோசாடோவின் மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பின்னரே இந்த யோசனை அவருக்கு வந்துள்ளது.
https://youtu.be/Dbev0uip25o