400 கடந்த இறப்பு எண்ணிக்கை… பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஆப்பிரிக்க நாடு

கிழக்கு காங்கோவில் பெருவெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 400 எண்ணிக்கையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு கிவு மாகாணத்தின் கலேஹே பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஞாயிறன்று மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

மட்டுமின்றி, பலரது சடலங்கள் கிவு ஏரியில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 394 என கூறப்படுகிரது, ஆனால் தேடுதல் தொடர்வதால் இது தற்காலிக எண்ணிக்கை மட்டுமே எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

400 கடந்த இறப்பு, எண்ணிக்கை, பெருவெள்ளத்தில், தத்தளிக்கும், ஆப்பிரிக்க நாடு

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 300க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலேஹே பிரதேசம் முழுவதும் வியாழன் மாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

நதிகள் கரைபுரண்டது, அத்துடன் பெருவெள்ளம் புகுந்ததில் புஷுஷு மற்றும் நியாமுகுபி கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

https://youtu.be/DBXj_lFFCP4

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button