திருமணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து செய்கிறார்களா பிரபல விஜய் டிவி சீரியல் ஜோடி- ரசிகர்கள் ஷாக்
விஷ்ணுகாந்த்-சம்யுக்தா – திருமணம்
பிரபலங்கள் சிலரின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பே தெரிந்துவிடும், ஆனால் சிலரது கல்யாணம் அவர்கள் புகைப்படங்கள் வெளியிட்டால் மட்டுமே தெரியும்.
அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நாங்கள் காதலிக்கிறோம், விரைவில் திருமணம் என அறிவித்த சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த்.
இவர்கள் இருவருக்கும் சிப்பிக்குள் முத்து தொடரில் நடிக்கும் போது காதல் ஏற்பட திருமணத்தில் முடிந்தது. கடந்த மாதம் தான் படு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடந்தது, பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
அதிரடி தகவல்
இந்த நேரத்தில் தான் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும், தங்களது இன்ஸ்டா பக்கங்களில் திருமண புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார்கள்.
இதுகுறித்து விஷ்ணுகாந்திடம் கேட்டபோது, விரைவில் எல்லாமே வெளியாகும் என கூறியிருக்கிறார்.
https://youtu.be/K6frR9Nc_KU