SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
IndiaTamilNews

துப்பாக்கியால் 4மணி நேரம் தாமதமடைந்த விமானம்

துப்பாக்கியால் ,4மணி நேரம் ,தாமதமடைந்த, விமானம்

கட்டுநாயக்காவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவில் இருந்து நேற்று பிற்பகல் இந்தியாவில் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர், தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தை வந்துள்ளார்.

Advertisements

இதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் அவர் எடுக்கப்பட்டமையினால் விமானம் புறப்பட 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியால் ,4மணி நேரம் ,தாமதமடைந்த, விமானம்

எனினும் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியேற விரும்பினால் அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியன் எயார்லைன்ஸின் AI-272 என்ற ஏர்லைன்ஸ் விமானத்தின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய விமான பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கி இருப்பதை அவதானித்து அவரை தடுத்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

Advertisements

Related posts

அமானுஷ்யங்கள் நிறைந்த அமெரிக்க ஆடம்பர ஹோட்டல்!

Harini

வெளிநாடொன்றில் இந்தியப் பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆப்பிரிக்க பெண்கள்!

Harini

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள அவல நிலை

Harini