மட்டக்களப்பில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் கண்கலங்க வைத்துள்ளது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் (04-05-2023) மாலை வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுவிட்டது.
Advertisements
இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதன்போது அங்குவந்த அதன் தாயும் சகோதர குட்டியும் கண்ணீர் சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் காணப்படுவது காண்போருக்கு கண்கலங்க வைத்துள்ளது.
Advertisements