சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிப்பு
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.27 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements
இந்த நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பல்வேறு அளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.
Advertisements