நடிகர் மனோபாலா காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா இன்று உடலநலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
1980 களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்
தமிழ் சினிமாவில் 1980-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலாவும் ஒருவர்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ஆகாய கங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். சிவாஜி, ரஜினி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மனோபாலாவின் திடீர் மரணம் திரயுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறி வருகின்றனர்.
https://youtu.be/MaxolWKAank