அமெரிக்காவின் நியூயார்க்கில் உடை ஏதுமில்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாண உணவு விருந்து
இரவு உணவு விருந்தை நாம் எப்படியெல்லாமோ கொண்டாடியிருக்கிறோம். மது, இசை, ஆட்டம் பாட்டமென தான் பொதுவாக இரவு உணவு விருந்து இருக்கும்.
ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் வித்தியாசமான முறையில் இரவு உணவு விருந்தை கொண்டாடியுள்ளனர்.
உணவும் மூச்சு பயிற்சியும் கலந்த அனுபவத்தை தர ஒரு குழுவினால் துவங்கப்பட்ட இந்த திட்டமானது, கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அபூர்வமான அனுபவத்தை தரும் ஒன்றாக இருப்பதாக அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
40 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவரும் உடை ஏதும் உடுத்தாமல் நிர்வாணமாக, ஒன்றாக அமர்ந்து மூச்சு பயிற்சி செய்கிறார்கள்.
நாங்கள் சுதந்திரமடைகிறோம்
பின்னர் படுத்துக் கொண்டு பலவித யோகாசன முறைகள் போன்ற சில பயிற்சிகள் செய்கிறார்கள். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து, இயற்கையான முறையில் மண்ணில் விளைந்த காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட உணவை உட்கொள்கிறார்கள்.
இந்த உணவு விருந்து நிகழ்வை நடத்தி வரும் சார்லி அன் மேக்ஸ் கூறுவதாவது ‘நாங்கள் நிர்வாணமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மிக தூய்மையான மற்றும் இயற்கையாக சுயத்தை வெளிப்படுத்துகிறோம். பாகுபாடு இல்லாமல் ஆரோக்கியமான உணவினை உண்டு புன்னகையுடன் இரவை கழிக்கிறோம்.” என்கிறார்.
‘நகரங்களில் செல்லும் போது பெண்கள் உடுத்தும் உடையினால் எத்தனை மன அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.’
‘ஆனால் இங்கு அனைவரும் சுதந்திரமாக உணர்கிறோம். இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஒரு பயிற்சியாக தான் நான் பார்க்கிறேன்’ அதில் கலந்து கொண்ட பெண் ஒருவர் பத்திரிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு இரவு இந்த உணவு விருந்தில் கலந்து கொள்ள $44 டொலர் முதல் $88 டொலர் வரை, நுழைவு கட்டணம் செலுத்த வேண்டுமென அதன் நிறுவனர் சார்லி அன் மேக்ஸ் தெரிவித்துள்ளார்.