6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு…80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்
பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக இரவில் தூங்குவதற்காக சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 20 அடி அகல படுக்கையை தயார் செய்துள்ளார்.
20 அடி அகல படுக்கை
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ(Arthur O’Urso) என்ற இளைஞர் ஒருவர், அவருடைய ஆறு மனைவிகள் ஒன்றாக உறங்குவதற்காக சுமார் 20 அடி அகலம் உள்ள பிரமாண்டமான படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த பிரமாண்ட படுக்கைக்கு 12 தொழிலாளர்கள் 15 மாதங்களாக உழைத்த நிலையில், பிரேசிலின் சால் பாலோவில்(Sao Paulo) வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள்(81 லட்சம்) செலவழித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்தர் வழங்கியுள்ள தகவலில், முந்தைய தருணங்களில் என் மனைவிகள் சோபாவையும், இரட்டை படுக்கையையும் பலமுறை பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்தது.
அத்துடன் சில சமயங்களில் தரையில் கூட தூங்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் ஒன்றாக வசதியாக படுப்பதற்கு பெரிய வசதியான படுக்கை கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் என் வாழ்வில் முக்கிய அங்கம் வசிக்கும் என் மனைவிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய படுக்கையை உருவாக்கிய பிரேசில் இளைஞர் ஆர்தரின் இந்த செயல், கின்னஸ் சாதனையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
6 மனைவிகள்
2021ம் ஆண்டு பிரேசில் இளைஞர் ஆர்தர் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசிலில் பலதார திருமண முறை சட்டவிரோதமானது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஆர்தர் மற்ற பெண்களை திருமணம் செய்து கொண்டு கத்தோலிக்க திருச்சபையில் சட்டப்பூர்வமாக்கி உள்ளார்.
ஆர்தர்க்கு மொத்தமாக 9 மனைவிகள் இருந்த நிலையில், அதில் மூன்று பேரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளார். தற்போது சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியாவை ஆர்தர் ஓ உர்சோ திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் இவருக்கு தற்போது லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), மற்றும் டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகிய மீதி ஐந்து மனைவிகளும் உள்ளனர்.
அனைத்து மனைவிகளுடனும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் ஓ உர்சோ தெரிவித்துள்ளார்.