அமெரிக்காவால் 800 ராணுவ வீரர்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்: வெளிவரும் புதிய தகவல்
அவுஸ்திரேலிய ராணுவத்தினர் 864 பேர்களுடன் கடலில் மூழ்கிய ஜப்பான் வணிக கப்பல் ஒன்று 84 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலானது தற்போது தென் சீன கடலில் நிபுணர்கள் தரப்பால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1942 ஜூலை மாதம் ஜப்பானுக்கு சொந்தமாக அந்த வணிக கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளது.
அந்த கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மிக மோசமான கடல் விபத்து என குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்துள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனான் துறைமுகத்திற்கு பயணப்பட்ட அந்த கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல் மூலமாக தாக்கி மூழ்கடித்துள்ளது.
தற்போது இந்த கப்பலானது 84 ஆண்டுகளுக்கு பிறகு லூசன் தீவின் வடமேற்கில் கண்டுபிடிக்கப்பட்டது. மட்டுமின்றி கடல் மட்டத்தில் இருந்து 13,123 அடி ஆழத்தில் அந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள், போர் கைதிகள், பல நாட்டு பொதுமக்கள் உட்பட 1,000 ஆண்களுக்கு மேல் பயணப்பட்டிருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.