காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 21 சடலங்கள்! பரபரப்பு சம்பவம்
கென்யா நாட்டில் காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.
இருப்பினும், இந்த கருத்தை பரப்பிய பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அந்த காட்டின் அருகே, பட்டினியால் வாடிக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க உறுப்பினர்களை பொலிஸார் காப்பாற்றியமை குறிப்படத்தக்கது.