SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

நெடுந்தீவு படுகொலை இப்படித்தான் நடந்தது.! – வெளியான பகீர் தகவல்கள்.!

நெடுந்தீவு படுகொலை இப்படித்தான் நடந்தது.! – வெளியான பகீர் தகவல்கள்.!யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் (22.04.2023) சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisements

இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூலையில் சுருண்டு படுத்துள்ளதுடன், அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது.

நெடுந்தீவில் பயங்கர கூட்டுப்படுகொலை; சந்தேக நபர் கைது; வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது கொலையாளிகள் தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடையாள அட்டை

அதேவேளை கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொலையானவர்கள் எவரும் தூக்கத்தில் கொல்லப்படவில்லை.

ஏனெனில் அவர்களின் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்படுகிறது. அதனால் அவர்கள் கொலையாளிகளிடம் இருந்து தப்பியோட முற்பட்டு கொலையாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்.நெடுந்தீவு கொலைகள் – கைதான சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

மற்றுமொரு பெண்மணியின் சடலம் கட்டிலின் கீழே அவரது கால்கள் தொங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வெட்டிய போது அவர் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தமைக்கு ஏது நிலையே காணப்படுகிறது.

பொலிஸார் தீவிர விசாரணை

அதேபோன்று ஜன்னல் ஓரமாக மீட்கப்பட்டவரின் சடலம் உள்ள ஐன்னல் குந்து மேல் சுவர் மீது இரத்தம் தெறித்து, வழிந்தோடிய அடையாளங்கள் காணப்படுவதனால், அவர் நிற்கும் நிலையிலையே வெட்டப்பட்டுள்ளமைக்கான ஏது நிலை காணப்படுகிறது.

எனவே எவரும் நித்திரையில் இருக்கும் போது படுகொலை செய்யப்படவில்லை என நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை , வெளிநாடொன்றில் இருந்து அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்ட நபர் ஒருவர் , குறித்த வீட்டில் இவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் அவரை நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts

அமெரிக்க வரலாற்றில் எந்த நிறுவனமும் வழங்காத தொகை; ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்த அறிவிப்பு!

Harini

ஜெர்மனியில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Harini

அமெரிக்காவில் டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை!

Harini