SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
TamilNewsWorld

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பெண்மணி!

இங்கிலாந்தில் ,மாரத்தான், போட்டியில், சேலையுடன் ,42 கிலோ மீட்டர், தூரம் ஓடிய ,பெண்மணி

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

Advertisements

இங்கிலாந்தில் ,மாரத்தான், போட்டியில், சேலையுடன் ,42 கிலோ மீட்டர், தூரம் ஓடிய ,பெண்மணி

சேலையுடன் ஓட்டம்
இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார்.

சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில்,

இங்கிலாந்தில் ,மாரத்தான், போட்டியில், சேலையுடன் ,42 கிலோ மீட்டர், தூரம் ஓடிய ,பெண்மணி

சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது.

முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பாட்டி மற்றும் தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன்.

அதேவேளை பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நான் நிரூபித்துள்ளேன் என பெருமித்ததுடன் கூறியுள்ளார்.

Advertisements

Related posts

ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Harini

ரயில்களில் மோதி மூவர் உயிரிழப்பு

Harini

மண்வெட்டியால் மருமகனை தாக்கி கொலை செய்த மாமனார்!

Chaya