பேட்ரியட் வான் பாதுகாப்பு பொறிமுறையின் முதல் தொகுதி உக்ரைனுக்கு கிடைத்ததாக அறிவிப்பு!
அமெரிக்காவின் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் முதல் தொகுதி தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரேன் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரேனின் அழகிய வானம் இன்று மேலும் பாதுகாப்பானதாக உள்ளது. ஏனெனில் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறைகள் உக்ரேனை வந்தடைந்துள்ளன என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகியன தமது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.