SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

இலங்கையில் நிலவும் அதிக வெப்பத்துக்கு என்ன காரணம் தெரியுமா!

இலங்கையில் ,நிலவும், அதிக வெப்பத்துக்கு, என்ன காரணம், தெரியுமா

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதியில், இதுபோன்ற நிகழ்வுகள் வழமையானவையாகும். மும்பையில் 11 பேர் உயிரிழந்த நிலைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இலங்கையில் ,நிலவும், அதிக வெப்பத்துக்கு, என்ன காரணம், தெரியுமா

இந்நிலையில் அதிக வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வுகளின்படி இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை இலங்கையில் வெப்பம் தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பல பிரதேசங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயர்வாக காணப்பட்டதுடன், பொலனறுவையில் 36.6 பாகை செல்சியஸாகவும், வவுனியாவில் 35 பாகை செல்சியஸாகவும், வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisements

Related posts

தெருநாய்கள் கடித்து சிறுவன் உயிரிழப்பு : தெலங்கானாவில் பயங்கரம்.!!

admin

மன்னாரில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை.!

admin

மன்னார் பேசாலை உணவகத்தில் பிரபலமாகும் ‘பூரான்’ கறி.!!

admin