சீனாவை அடுத்து இலங்கையிடமிருந்து அமெரிக்காவும் குரங்குகளை கோரியுள்ளது என தெரியவந்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
Advertisements
எனினும், எண்ணிக்கை பற்றி இன்னும் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து ஒரு லட்சம் குரங்குகள் சீனாவுக்கு அனுப்படவுள்ளன. இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையிலேயே அமெரிக்காவிடம் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்கு எனக் கூறப்பட்டாலும் முதற்கட்டமாக 500 முதல் 1000 வரையான குரங்குகளே அனுப்படும். – எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisements