அதிக நேரம் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து தொடர்பில் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பமாக இருக்கிறார்கள். அதிலும், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதனால், குழந்தையை சமாளிப்பதற்கு பெரும்பாலும் தங்களது கையடக்க தொலைபேசி கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் குழந்தைகளே பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன. பெரியவர்கள் தான் கையடக்க தொலைபேசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் கையடக்க தொலைபேசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு வயது குழந்தைக்கு கூட கையடக்க தொலைபேசி பயன்படுத்த தெரிந்துள்ளது. இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், செபோன்கள் பயன்படுத்தும் 14 முதல் 18 வயதுடைய சிறார்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
அதில் ஒருநாளைக்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு, முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஸ்மோர்ட்போன் மோகத்தால் சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.